சாவகச்சேரியில் ரயிலில் மோதி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அருகில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 6.50 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற காட்சி அருகிலுள்ள CCTV-இல் பதிவாகியுள்ளது.

Sharing is caring!