சாவகச்சேரி தனியார் நிறுவனத்தில் கஞ்சா வளர்ப்பு….மோப்பம் பிடித்த பொலிஸ்

சாவகச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதனை வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த தனியார் நிறுவனத்திற்குள் கஞ்சா செடி வளர்க்கப்படுவது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித்த தனியார் நிறுவனத்திற்கு இன்று சென்ற பொலிஸார் அதனை சோதனையிட்டபோது உண்மையிலேயே கஞ்சா செடி வளர்க்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து

அதனை வளர்த்த 35 வயதான நபரை கைது செய்துள்ளதுடன், கஞ்சா செடியையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்ட நபர் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறுகின்றனர்.

Sharing is caring!