சிகரட் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நீதிவான் 3ஆயிரம் ரூபாய் அபராதம்

புகைத்தல் சம்பந்தமான எச்சரிக்கைப் படமில்லாது சிகரட் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நீதிவான் 3ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.காரைநகர் பகுதியில் கடை உரிமையாளர் ஒருவர் புகைத்தல் தொடர்பான எச்சரிக்கை படமில்லாது சிகரட் விற்பனை செய்தார் என காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

குறித்த வழக்கு நேற்றைய தினம் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , கடை உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

Sharing is caring!