சிகிச்சைப் பெற்று வந்த யானை மாயம்

துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்றுவந்த கலாவெவ தேசிய பூங்காவில் இருந்த யானையொன்று கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 25 க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுடைய நீண்ட தந்தத்தையுடைய குறித்த யானை சுற்றுலாப்பயணிகளின் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குறித்த யானையின் முன்பக்க வலது பாதத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், விலங்கு நல மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில், குறித்த யானை காணாமல் போயுள்ளதாக வனவல பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த யானையை தேடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!