சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் வடக்குகிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயல்வார்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த நலனிற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் சொந்த மக்களின் உண்மையான தேவைகள் குறித்து ஒருபோதும் சிந்திக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்தமிழ்தேசிய கூட்டமைப்பினர் என்ன முடிவை எடுத்தாலும் சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் அது குறித்து கவலைப்படாமல் வடக்குகிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயல்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் புனர்வாழ்வு குறித்தும் கவனம் செலுத்துவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!