சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்
முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரைப் பகுதியில் கிருமித் தொற்று காரணமாக திடீர் காச்சலின் காரணமாக 9 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
முத்தையன்கட்டு இடதுகரைப் பகுதியில் உள்ள ஜீவநகரைச் சேர்ந்த சந்திரபாலன் – கானுயா என்னும் 2010-01-18 அன்று பிறந்த சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை காச்சலானால் பீடிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனும்மிக்கப்பட்டார். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த சிறுமியின் உடலம் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் நேற்று மாலையில் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் மரணத்திற்கு கிருமித் தொற்றே காரணம் என வைத்தியசாலைத் தரப்பு தெரிவித்துள்ளனர்
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S