சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது

வலிவடக்கு பிரதேசபை உறுப்பினர் சே. கலைஅமுதனின் வேண்டுகோளுக்கு இணங்க தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

வறுத்தலைவிளான் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த றொபின்சன் ஆகாஷ்( வயது 03) என்ற சிறுவனுக்கே புதிய சுதந்திரன் பணிமனை நிர்வாக பணிப்பாளரும்,தாய்வீடு அச்சகம், லவ்லி கிறீம் ஹவுஸ் உரிமையாளருமான அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களால் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

குறித்த சிறுவன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு செல்லவேண்டியிருந்த நிலையில் குடும்பத்தின் வறுமை நிலையை கருத்திற் கொண்டு இந்த நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா, வலிவடக்கு பிரதேசபை உறுப்பினர் சே. கலைஅமுதன் ,நிதியுதவியை அளித்த அகிலன் முத்துக்குமாரசுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sharing is caring!