சிறுவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் – ஜனாதிபதி

சிறுவர் உரிமை மற்றும் சலுகைகள் தொடர்பில் சிறுவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்தவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலி, பலப்பிட்டிய ரேவத தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை பொறுப்புக்களை ஏற்கும் பிர​ஜைகளாக உருவாக்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட ​வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் தொடர்பில் செயலாற்றுவதற்காக நாட்டில் பல அரச நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அந்நிறுவனங்களின் அனைத்து நடவடிக்கைகளும் சிறுவர்களை சென்றடைய வேண்டுமெனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகளுக்காக வேறெந்த அரசாங்கமும் செய்யாத வகையில் பாரிய நிதியொதுக்கீட்டை தமது அரசாங்கமே மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Sharing is caring!