சிறைக்கைதிகள் மகிழ்ச்சியில்…

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று 545 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலையில் 41 சிறைக்கைதிகளும், அனுராதபுரம் சிறைச்சாலையில் 46 பேரும், பல்லேகம சிறைச்சாலையில் 36 பேரும் உள்ளடங்களான 29 சிறைச்சாலைசாலைகளிலுள்ள சுமார் 545 சிறைக்கைதிகள் நாளை விடுவிக்கபடவுள்ளனர்.

சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருபவர்கள் மற்றும் அபராதம் செலுத்த முடியாமல் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர்.

Sharing is caring!