சிறைச்சாலையை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது

நீர்கொழும்பு சிறைச்சாலையை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

கைதி ஒருவர் வெளியில் உள்ளவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.

குறித்த தொலைபேசி அழைப்பினூடாக தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு அமைய, மறைத்து வைக்கப்பட்டிருந்த 52 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டிலுள்ள சில சிறைச்சாலைகளில் இவ்வாறு போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு குறிப்பிட்டார்.

இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் அதனோடு தொடர்புடையவர்கள் குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் தேவையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Sharing is caring!