சிற்றுண்டிகளின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது

சமையல் எரிவாயுவின் விலை 195 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிற்றுண்டிகளின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அப்பம் ஒன்றின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தற்போது 12 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவாக அதிகரிப்படவுள்ளதுடன், முட்டை அப்பத்தின் விலையில் எவ்வித அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பால்தேநீர், அப்பம், பிட்டு, ரொட்டி உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Sharing is caring!