சில்லறை வியாபாரிகள் விவசாயிகள் தரவு பதிவு ஆரம்பம்

விவசாயிகள், சில்லறை வியாபாரிகளை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், மூன்றரை இலட்சம் விவசாயிகளை பதிவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முதலாம் வேலைத்திட்டத்தின் கீழ், சில்லறை வியாபாரிகள் ஆயிரத்து 500 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!