சிவன் கோயில் ஆலய தேர்த்திருவிழாவில் பட்டுச் சேலை அணிந்து அசத்திய வெளிநாட்டுப் பெண்கள்… !பார்த்து அசந்து போன நம்மவர்கள்..!

யாழில் புடவை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர் மேற்கத்தேய பெண்மணிகள்.
தற்போதைய நவீன நாகரிக உலகில் தமிழ் பெண்களே புடவை அணிவதில் பின்நிற்கின்றனர். ஆலய திருவிழாக்களில் கூட புடவையை தவிர்த்து நாகரிகமாக கருதும் ஆடைகளை அணிகின்றனர்.

ஆனால் எமது நாட்டை பார்க்க வரும் வெளிநாட்டவர்கள் எமது கலாசாரத்தின் மேல் காதல் கொண்டு அவர்களின் செயற்பாடுகளின் மூலம் எமது கவனத்தை ஈர்ப்பர்.

அவ்வாறே யாழ் காரைநகர் சிவன் கோயிலில் இன்று இடம்பெற்ற தேர் திருவிழாவின்போது புடவை அணிந்து சென்று அனைவரையும் ஈர்த்துள்ளனர் இந்த வெளிநாட்டு பெண்கள்.இப்படியான சம்பவங்கள் யாழில் திருவிழா காலங்களில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!