சி.வி. விக்னேஸ்வரனின் புதிய கட்சி

தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் புதிய கட்சி செயற்படும் எனவும் முதல்வர் நல்லூரில் இன்று (24) நடைபெற்ற நிகழ்வின்போது அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ். நல்லூரில் முதலமைச்சரின் எதிர்கால அரசியல் தொடர்பில் அறிவிக்கும் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.

மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரநிநிதிகள் மற்றும் அதிகளவிலான ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Sharing is caring!