சீனாவிடமிருந்து நிதி பெற்ற விவகாரம்- மகிந்தவுக்கு எதிராக பிரேரணை!!

தேர்தல் பரப்புரைக்காகச் சீன நிறுவனத்திடம் இருந்து, 7.6 மில்லியன் டொலர் நிதியை மகிந்த ராஜபக்ச பெற்றார் என்று, நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, நாடாளுமன்றில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

எதிர்­வ­ரும், வியா­ழக்­கி­ழமை இந்த ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை ஐக்­கிய தேசி­யக் கட்சி கொண்­டு­வ­ரும் என்று, அந்­தக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அசு மார­சிங்க தெரி­வித்­தார்.

‘‘கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­கள் குறித்த ஒத்­தி­வைப்பு வேளை பி­ரே­ரணை ஒன்­றைச் சமர்ப்­பிப்­பது குறித்து, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் விவா­ திக்­கப்­பட்­டது.எனி­னும், வாரத்­தில் ஒரு ஒத்­தி­வைப்பு வேளைப் பிரே­ர­ணை­யைக் கொண்டு வரவே எமக்கு அனு­மதி உள்­ளது. எனவே, நியூ­யோர்க் ரைம்ஸ் செய்தி தொடர்­பாக முத­லில் ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தை நடத்த முடிவு செய்­துள்­ளோம்” என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

Sharing is caring!