சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சீனிக்காக, 100 ரூபா கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக கைத்தொழில், வணிக அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக குறிப்பிட்டார்.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் தொடர்பிலான அமைச்சரவை அனுமதியைப் பெறுவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

32 ரூபாவாகக் காணப்பட்ட சீனி மீதான விசேட வர்த்தக பொருளுக்கான வரி, கடந்த மாதம் முதல் 42 ரூபாவாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!