சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 30 சதமாகக் குறைப்பு

பழச்சாறு தயாரிப்பிற்கான, ஒரு கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 30 சதமாகக் குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பழச்சாறு மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினர் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போதே, வரியை குறைப்பதற்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனைத் தவிர, இரசாயன சுவையூட்டிகளுக்காக 6 கிராம் வரை மற்றும் பழச்சாறு வகைகளுக்காக 9 கிராம் வரையும் வரியை குறைக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு, பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!