சீனியின் மொத்த விற்பனை விலையில் திருத்தம்

அதிகரிக்கப்பட்ட சீனியின் மொத்த விற்பனை விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட சீனியின் மொத்த விற்பனை விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர்
பி.எம். அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விற்பனை விலை 101 ரூபாவாகும்.

எனினும், சில்லறை விலைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நிதி அமைச்சு கடந்த 19 ஆம் திகதி வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 18 ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் சீனிக்கு 42 ரூபா வரி அறவிடப்படுவதால், இறக்குமதியாளர்களுக்கு இலாபம் ஏற்படுவதாகவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் சீனியின் விலை குறைவடைந்தமையே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!