சீரற்ற வானிலையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள படையினர் தயார்
சீரற்ற வானிலையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு 1,200 படையினர் தயாராக உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்றைய தினம் 200 இராணுவத்தினர், அனுப்பிவைக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் 60 பேரும் காலி மாவட்டத்தில் 50 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 110 இராணுவத்தினரும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S