சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக அமெரிக்க டொலர் நிதி உதவி

இலங்கையின் 4 மாவட்டங்களில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 5 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.

இதற்கமைவாக வட மத்திய, சப்ரகமுவ, ஊவா ஆகிய மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஆரம்ப வைத்தியசாலை அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை நிதி மற்றும் ஊடக அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

Sharing is caring!