சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் 3,593 பேர் கைது

இன்று அதிகாலை 3 மணியிலிருந்து முற்பகல் 7 மணி வரை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் 3,593 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,111 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 451 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதன்போது, வெவ்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 978 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 947 பேரும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 104 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

இதனிடையே, துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 6,542 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

Sharing is caring!