சுற்றிவளைப்பில் 3,325 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (26) இரவு 9 மணி முதல் இன்று காலை 8 மணி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 948 பேர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த சுற்றிவளைப்பின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 5,808 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Sharing is caring!