சுற்றுலாத்துறை கடந்த மூன்றரை வருடங்களில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது

நாட்டின் சுற்றுலாத்துறை கடந்த மூன்றரை வருடங்களில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசேட செயற்திட்டம் காரணமாக அந்நியச் செலாவணியாக 3,500 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடாந்தம் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட உல்லாசப் பிரயாணிகள் நாட்டிற்குள் வருகை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுற்றுலா தின சிறப்பு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!