சுற்றுலாப் பயணிகளின் வருகை 5 வீதத்தால் அதிகரித்துள்ளது

இலங்கையில் கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 5 வீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 200359 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை 5 சதவீத அதிகரிப்பாகும்.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்களில் அதிகமானவர்கள் இந்தியப் பிரஜைகளாவர்

சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Sharing is caring!