சுழிபுரத்திலிருந்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வரை பேரணி

மாணவி றெஜினாவின் கொலையைக் கண்டித்தும் நீதி கோரியும் சுழிபுரத்தில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுழிபுரம் சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை பேரணியொன்றையுப் நடத்தியிருந்தனர் சுழிபுரத்தில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு பொது அமைப்புக்களும் சங்கங்களும் ஆதரவைத் தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுழிபுரத்திலிருந்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வரை பேரணியாகச் சென்று பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர் இதேவேளை சுழிபுரத்தில் போராட்டம் நடைபெறுமிடத்திற்கு கல்வி அமைச்சர் வர வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!