”சேதன மற்றும் நகர்ப்புற விவசாயக் கண்காட்சி”

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”சேதன மற்றும் நகர்ப்புற விவசாயக் கண்காட்சி” இன்று நடைபெற்றது.

”நகர்ப்புறங்களில் நஞ்சற்ற விவசாயத்தினை மேற்கொள்ளல்” எனும் தொனிப்பொருளில் இந்த கண்காட்சி இடம்பெற்றது.

மாகாண விவசாயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஹுசைன் தலைமையில், இஹ்சானியா மகா வித்தியாலயத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது.

பயிரிட்டு அறுவடை செய்யக்கூடிய தருவாயிலுள்ள மரக்கறி வகைகள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அத்துடன், உலர் வலய மற்றும் ஈரவலய பயிர்களும் மத்திய மலைநாட்டுப் பயிர்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கண்காட்சியில் கலந்துகொண்ட பாடசாலைகளுக்கும் விவசாயிகளுக்கும் சான்றிதழ் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டன.

Sharing is caring!