சைட்டம் மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவியை மருத்துவ சபையில் பதிவு செய்ய தீர்ப்பு

சைட்டம் (SAITM) தனியார் நிறுவனத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவியை மருத்துவ சபையில் பதிவு செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை மருத்துவ சபை மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்து, உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இலங்கை மருத்துவ சபையின் தவறான நடவடிக்கையினால், குறித்த மாணவியை மருத்துவ சபையில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

Sharing is caring!