சோகத்தில் ஆழ்த்தியுள்ள காதல்…!

கடவத்தை அதிவேக வீதி நுழைவாயில் அருகாமையில் சிற்றூந்து ஒன்று, முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் கிரிபத்கொடையை சேர்ந்த ச்சிரான் எனும் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் கடந்த 03 மாதங்களிற்கு முன்னர் இடம்பெற்றது.

எவ்வாறாயினும் விபத்தில் ஓர் சோகமான காதல் கதை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விபத்தின் போது ச்சிரானின் காதலி தருசி எனும் யுவதியும் முச்சக்கர வண்டியில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனக்கு முன்னால் காதலனின் உயிர் பிரிந்த நிலையிலும் ,தருசியின் நினைவில் இருந்து ச்சிரானின் நினைவுகள் பிரியவில்லை.

இதனிடையே தனது காதலனின் பிறந்த நாள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்த நிலையில், காதலனது பிறந்த நாளை கேக் வெட்டி காதலி கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!