சோளத்திற்கு கிலோவொன்றுக்கு 10 ரூபா – விசேட விற்பனை வரி

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு கிலோவொன்றுக்கு 10 ரூபா அடிப்படையில் விசேட விற்பனை வரி விதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்தார்.

இதேவேளை, கால்நடைகளின் உணவிற்காக 50,000 மெட்ரிக்தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Sharing is caring!