ஜனவரி 05 இல் தேர்தல்- தேர்தல் ஆணையம்

மக்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாத முடிவிற்குள் தேர்தலை நடாத்தும் முறைமை தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றுக்கு வருமாக இருந்தால், எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும், எல்லை நிர்ணயக் குழுவின் தலைவரும் அறிவிப்புச் செய்துள்ளனர்.

தாமதமடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவது தொடர்பில் நேற்று (20) சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்ட இறுதியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இரு தலைவர்களும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கலந்தாலோசனை நடாத்தி தீர்மானம் ஒன்றுக்கு வருவதற்கு குழுவொன்றை நியமிக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சபாநாயகர் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

Sharing is caring!