ஜனாதிபதித் தேர்தல் குறித்த காலத்தில் நடைபெறும்
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டிய திகதிக்கு முன்னரோ, பின்னரோ ஜனாதிபதித் தேர்தலை நடத்தப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்தநிலையில், உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமாயின், அது தொடர்பில் தாமே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி – நிவிதிகலவில் நடைபெறும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.
அதேநேரம், உடன் அமுலுக்குவரும் வகையில், இரத்தினபுரியில், கங்கைகளில் மாணிக்கக்கல் அகழ்வை முன்னெடுப்பதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S