ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு வருட நிறைவை ஒட்டி பால்வேறு நிகழ்வுகள்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு வருட நிறைவை ஒட்டி பால்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஜனவரி 08 ஆம் திகதியுடன் நான்கு ஆண்டுகாலம் நிறைவடைகின்றது.

இலங்கையின் 7 வது ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன கடந்த 09.01.2015 ஆம் திகதியன்று பதவியேற்றுக் கொண்டதையடுத்து நாளையுடன் நான்கு வருடங்கள் நிறைவுபெறுகின்றன.

அதனை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரித் பாராயண நிகழ்வு இன்று (07) இரவு முதல் நாளை அதிகாலை வரையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

Sharing is caring!