ஜனாதிபதியினதும் சட்ட முரணான பிரதமரினதும் முதலாவது ஆட்டமே தோல்வி

ஜனாதிபதியினதும் சட்ட முரணான பிரதமரினதும் முதலாவது ஆட்டமே தோல்வியில் முடிவடைந்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (09) நள்ளிரவு அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியும் புதிய பிரதமரும் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறினர். பின்னர் அதே தரப்பிலிருந்து 104 தான் உள்ளது எனத் தெரிவித்தனர். இன்னும் 9 போதாது என்று நேற்று தெரிவித்தனர். இதனால், இவர்களின் முதலாவது ஆட்டத்திலேயே தோல்வியடைந்துள்ளனர்.

இரண்டாவது ஆட்டத்தையும் அதிகாரத்தை மீறி ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதனையும் நாம் தோல்வியடையச் செய்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!