ஜனாதிபதியின்பாராளுமன்ற கலைப்பு   நடவடிக்கையால் பல விடயங்கள் ஆபத்திற்குள்ளாகியுள்ளன

ஜனாதிபதியின்பாராளுமன்ற கலைப்பு   நடவடிக்கையால் பல விடயங்கள் ஆபத்திற்குள்ளாகியுள்ளன மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதார முன்னேற்றத்தையும் இலங்கையின் சர்வதேச கௌரவத்தையும் பாதிக்கலாம் எனவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியை இலங்கையின் ஜனநாயக பாராம்பரியத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ள.

அமெரிக்க தூதரகம் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கம் மற்றும் ஜனநாய குறித்த அர்ப்பணிப்பின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டனர் என்பதால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பது என்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அமெரிக்க தூதரகத்திற்கு நேற்று நள்ளிரவு பேரிடியாக மாறியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sharing is caring!