ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் கட்டளைக்கமைய மட்டுமே பொலிஸ் திணைக்களம் செயற்படும்

ஜனாதிபதியினால் வழங்கப்படும் உறுதியான ஆலோசனை மற்றும் கட்டளைக்கமைய மாத்திரமே, பொலிஸ் திணைக்களம் செயற்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சட்டம், ஒழுங்கு அமைச்சராக ஜனாதிபதியே செயற்படுவதாகவும் பொலிஸ்மா அதிபர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமையவே பொலிஸார் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ரஞ்சித் மத்தும பண்டாரவினால் பொலிஸ் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தை அங்கீகரிக்க முடியாது என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!