ஜனாதிபதியைக் கொலை சதி – உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடாத்தி உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா ஜனாதிபதியையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும் கொலை செய்ய சதி செய்ததாக ஊடகங்களின் முன்னிலையில் பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் ஊடகங்களில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்தே பிரதமர் பொலிஸ் மா அதிபரிடம் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Sharing is caring!