ஜனாதிபதியை கொலை செய்ய குற்றச்சாட்டு குறித்து விசாரணை

ஜனாதிபதியை கொலை செய்வதற்கு சதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் மா அதிபர் தற்பொழுது விசாரணைகளை நிறைவு செய்திருப்பார் என தான் நம்புவதாகவும், அவ்வாறு அவர் செய்திருக்காவிடின் பதவி மாற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். இதனை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஜனாதிபதி இது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில், அவர் ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் ஒருவர் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!