ஜனாதிபதி இன்று தஜிகிஸ்தானுக்கு பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (13ஆம் திகதி) காலை தஜிகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளார்.

சீனாவின் ஷங்காய் கோபரேஷனனின் ஏற்பாட்டில் நடைபெறும் பிராந்திய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி தஜிகிஸ்தானுக்கு செல்லவுள்ளார்.

நாளை மறுதினம் (15ஆம் திகதி) ஜனாதிபதி இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஷங்காய் கோபரேஷனனில் அங்கம் வகிக்கின்றன.

Sharing is caring!