ஜனாதிபதி சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

நியூஸ்பெர்ஸ்ட் வினவியபோது, பாராளுமன்ற உறுப்பினர் நலின்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்குபற்றுதலுடன், இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இங்தக் கூட்டத்திற்கு சபாநாயகர், அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலைக்கான முக்கிய 5 காரணங்கள் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அனைத்து கட்சி பிரதிநிதிகளின் சந்திப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!