ஜனாதிபதி தேர்தலில் இவர்களையே ஆதரிப்பேன். …..சி.வி

தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை தீர்த்துவைக்க கூடிய தரப்பினர் 3ம் தரப்பு ஒன்றின் ஊடாக தமக்கு உத்தரவாதம் வழங்கினால் அவர்களுக்கு ஆதரவளிப்பேன்.

மேற்கண்டவாறு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தரப்பினர், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கை குறித்து மத்தியஸ்தர் ஒருவரின் ஊடாக உத்தரவாதமளித்தால்,

தமது ஆதரவு தொடர்பில் சிந்திக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்தார்.

Sharing is caring!