ஜனாதிபதி மீது சரமாரியான குற்றச்சாட்டுக்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு இன்று அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

“துப்பாக்கிகள் மற்றும் போர்த்தாங்கிகள் இன்றி செய்யப்பட்ட ஒரு சதியின் விளைவாகவே இன்று அரசியல் நெருக்கடி இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இது நீண்ட நாள் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒரு விடயம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்தகட்ட நடவடிக்கைள் தொடர்பில் ஆராய்வதற்காக கட்சித் தலைவர்களுடன் இன்று மாலை 3 மணியளவில் சபாநாயகர் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Sharing is caring!