ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை நீக்குவது தொடர்பான 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் சமர்ப்பிப்பு

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை நீக்குவது தொடர்பான 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தினால் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!