‘டிகிரி சக்தி’ பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் கீழ் தோட்டசிறார் களுக்கு பிஸ்கட்
களுத்துறை மாவட்டத்தில் அரபொலகந்த தோட்டசிறார்;களுக்கு பிஸ்கட்கள் வழங்கப்பட்டன.
பெருந்தோட்ட சிறார்களின் போசணை மட்டத்தை அதிகரிப்பதற்கான ‘டிகிரி சக்தி’ பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் கீழ், சிறார்களுக்கு பிஸ்கட்களை சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் அமைச்சர்ராஜித சேனாரத்ன நேற்று வழங்கினார்.2 தொடக்கம் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு, பிஸ்கட்கள் விநியோகிக்கப்பட்டன.
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் பின்னகொட வித்தான, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை மற்றும் மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S