டிட்லி (Titli) சூறாவளி காரணமாக கரையோரத்தை அண்டிய பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
டிட்லி (Titli) சூறாவளி காரணமாக கரையோரத்தை அண்டிய பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
டிட்லி சூறாவளி தற்போது திருகோணமலைக்கு அப்பால் 1050 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை நாளை (11) முதல் குறைவடையக்கூடுமென திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S