டொலரின் பெறுமதி அதிகரிப்புடன் வாகன டயர்களின் விலையிலும் திருத்தம்

டொலரின் பெறுமதி அதிகரிப்புடன் வாகன டயர்களின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், செலாவணி விகிதங்கள் காரணமாக, விலைத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு, டயர் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதற்கமைய, ஓட்டோ, மோட்டார் சைக்கிள்களின் டயர் விலையை 12 சதவீதத்தாலும், கார்களின் டயர் விலையை 10 சதவீதத்தாலும் லொறி மற்றும் பஸ் டயர்களை 10-15 சதவீதத்தாலும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த புதிய விலையை சில நிறுவனங்கள் தற்போதே நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், மேலும் சில நிறுவனங்கள் நாளை டயர்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

Sharing is caring!