தங்க நகைகளுடன் ஆணொருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட தங்க நகைகளுடன் ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை சுங்க மத்திய விசாரணை பிரிவின் விசேட குழுவொன்றினால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
இதன்போது கடுகண்ணாவையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று காலை 7 மணியளவில் சென்னையிலிருந்து இலங்கை ஏ.ஐ. 273 இலக்க விமானத்தில் இலங்கை வந்துள்ளதுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் கட்டுநாயக்க பச்சை வலையமைப்பினூடாக வெளியேற முயற்சிக்கையிலேயே குறித்த நபர் தடுத்துவைக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரது பயணப்பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 198 கிராம் நிறையுடைய தங்க நகைகள் சுங்க பிரிவினரால் மீட்கப்பட்டது.
இவ்வாறு மீட்கப்பட்ட தங்க நகைகளின் மொத்த பெறுமதி 9 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைதுசெய்து தொடர் விசாரணைகளுக்குட்படுத்தியுள்ள சுங்க பிரிவினர், தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!