தங்க பிஸ்கட் கடத்தல்…9 பேர் கைது

ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் துபாயில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் சுமார் ஒரு ​கோடியே 63 இலட்சத்து 44 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய தங்காபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்களை தமது பயணப் பொதிகளில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மருதானை, நீர்கொழும்பு, சீதுவ, சிலாபம் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

Sharing is caring!