தட்டுப்பாடான மருந்துகள் இறக்க முடிவு

வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாகக் காணப்படும் 25 ற்கும் மேற்பட்ட மருந்துவகைகளைப் பாவனைக்காக இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவற்றில் சில மருந்துவகைகள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர், டொக்டர் லால் பனாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை காணப்படுவதாகவும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டொக்டர் லால் பனாப்பிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தவிர, மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு 15 வகையான மருந்துகளில் 7 வகையான மருந்துகளை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றில் 4 வகையான மருந்துகள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் டொக்டர் லால் பனாப்பிட்டிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிறுநீரக நோய் தொடர்பில் பற்றாக்குறையாகக் காணப்பட்ட மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு வைத்தியாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், அரச வைத்தியசாலைகளில் மருந்துகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர், டொக்டர் லால் பனாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Sharing is caring!