தனியார் துறையிடமிருந்து மின்சாரக் கொள்வனவு

தனியார் துறையினரிடமிருந்து 300 மெகாவா மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

6 மாதங்களுக்கு இந்தக் கொள்வனவு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதற்கான பிரேரணை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அனுமதி வழங்கியதன் பின்னரே மின்சாரக் கொள்வனவிற்கான விலைமனு கோரப்படவுள்ளது.

உரிய மழைவீழ்ச்சி பதிவாகும் வரை, மக்களின் நாளாந்த பயன்பாட்டிற்காகவே தனியார் நிறுவனத்திடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sharing is caring!