தமி­ழி­னத்­தின் கொள்­கை­யைப் பல கோடி­க­ளுக்­குப் பேரம் பேசி மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் சர­ணா­க­தி­ய­டைந்த பச்­சைத் துரோகி

பிரதி அமைச்­சுப் பத­வி­யைப் பெறு­வ­தற்­காக தமி­ழி­னத்­தின் கொள்­கை­யைப் பல கோடி­க­ளுக்­குப் பேரம் பேசி மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் சர­ணா­க­தி­ய­டைந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப் ­பி­னர் சதா­சி­வம் வியா­ழேந்­தி­ரன் பச்­சைத் துரோகி.

இவ்­வாறு மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் அமைப்­புக்­க­ளின்முக்­கிய தலை­வர்­கள் கடும் ஆவே­சத்­து­டன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­த­னர்.

தமி­ழர்­கள் ஒற்­று­மை­யையே முத­லா­வ­தாக எதிர்­பார்ப்­ப­வர்­கள். கொள்­கைக்­காக பல்­லா­யி­ரம் உயிர்­க­ளை­யும் தியா­கம் செய்த இனம். இந்த இனத்­தி­லி­ருந்து மக்­கள் பிர­தி­நி­தி­யொ­ரு­வர் காலை­வா­ரு­வது, மக்­களை கொதிப்­ப­டைய செய்­யும்.

அது, உட­னேயே எதி­ரொ­லிக்க ஆரம்­பித்­துள்­ளது. சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் பல­ரும் தமது கண்­ட­னக் கருத்­துக்­க­ளைப் பதிவு செய்­த­னர்.

அன்­றி­லி­ருந்து இன்று வரை காக்கை வன்­னி­யர்­கள் இருக்­கவே செய்­கின்­ற­னர் என்­றும் பதி­விட்­ட­னர். மிக மோச­மாக, சபைக்கு ஒவ்­வாத வார்த்­தை­க­ளைப் பிர­யோ­கித்து வியா­ழேந்­தி­ரனை வசை­பா­டிப் பதி­விட்­ட­னர்.

இதே­வேளை, மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ்க் கலை­ஞர் சங்­கத்­தின் முக்­கி­யஸ்­தர் தி.பார்த்­தீ­பன் தெரி­வித்­த­தா­வது,

எமது சுய­நிர்­ணய உரி­மை­யைப் பெறு­வ­தற்­கா­கவே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்­றத்­துக்­குள்­ளும் வெளி­யி­லும் போராடி வரு­கின்­றது. ‘வீடு’தான் எங்­கள் சின்­னம். அந்­தச் சின்­னத்­தில் போட்­டி­யிட்­ட­வர்­க­ளுக்கு அமைச்­சுப் பத­வி­யைப் பெறு­வ­தற்­காக நாம் வாக்­க­ளிக்­க­வில்லை.

கொள்­கை­யின் வழி­யில் நின்று எமது உரி­மை­யைப் பெறு­வ­தற்­கா­கவே நாம் வாக்­க­ளித்­தோம். எங்­கள் வாக்­கு­க­ளி­னால் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தெரி­வான சதா­சி­வம் வியா­ழேந்­தி­ரன் நேற்று மகிந்­த­வி­டம் சர­ணா­கதி அடைந்­து­விட்­டார்.

பிரதி அமைச்­சுப் பத­வி­யைப் பெறு­வ­தற்­காக தமி­ழி­னத்­தின் கொள்­கை­யைப் பல கோடி­க­ளுக்­குப் பேரம் பேசி மகிந்­த­வின் கரங்­களை இறு­கப் பற்­றி­யுள்­ளார். இவரை ஒரு­போ­தும் மன்­னிக்க முடி­யாது. இவர் பச்­சைத் துரோகி – என்­றார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் பட்­டி­ருப்­புத் தொகு­தித் தலை­வ­ரு­மான பா.அரி­ய­நேந்­தி­ரன், கிழக்­கில் அமைச்­சுப் பத­வி­களை வைத்­துள்ள முஸ்­லிம்­கள் தமி­ழர்­களை ஒடுக்கி தமி­ழர் நிலங்­கள் ஆக்­கி­ர­மிக்­கின்­ற­னர்.

அத­னைத் தடுக்க வேண்­டு­மாக இருந்­தால் கிழக்­கில் தமி­ழர்­க­ளும் அமைச்சு அதி­கா­ரங்­க­ளைக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கத்­தான் வேண்­டும். அத­னைக் கருத்­தில்­கொண்டே கிழக்கு மாகாண அபி­வி­ருத்தி பிரதி அமைச்­சுப் பத­வியை வியா­ழேந்­தி­ரன் பொறுப்­பேற்­றுள்­ளார் என­வும் பல கார­ணங்­கள் சொல்­லப்­ப­டு­கின்­றன.

இதனை நாம் ஏற்­க­மாட்­டோம். பல கோடி­க­ளைப் பெற்று மைத்­திரி – மகிந்­த­வின் கால்­க­ளில் விழுந்­து­தான் அமைச்­சுப் பதவி பெற­வேண்­டிய அவ­சி­யம் கிடை­யாது.

அவர் தனது சுக­போக வாழ்க்­கைக்­கா­கவே அமைச்­சுப் பத­வி­யைப் பெற்­றுள்­ளார். இவரை வர­லாறு மன்­னிக்­காது.

தமி­ழி­னத் துரோகி பிள்­ளை­யா­னின் கட்­சி­யி­லி­ருந்த இவரை புளொட் அமைப்பே இழுத்து வந்து கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் போட்­டி­யிட வைத்­தது.

வியா­ழேந்­தி­ர­னின் பச்­சைத் துரோ­கத்­துக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­யான புளொட் அமைப்பே பொறுப்­பா­கும்.

புளொட் அமைப்­பின் சார்­பி­லேயே இவர் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் போட்­டி­யிட்­டார். விரை­வில் இவ­ருக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலைமை தக்க பாடம் புகட்­டும் – என்­றார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் இளை­ஞர் அணி உறுப்­பி­னர் மாணிக்­க­வா­ச­கர் குலேந்­தி­ரன், கிழக்­கில் இன்­னொரு துரோகி வெளிப்­பட்­டுள்­ளான். சலு­கை­க­ளுக்கு – கோடி­க­ளுக்கு ஆசைப்­பட்டு தமிழ்த் தேசி­யத்தை விற்­று­விட்­டார். இவ­ரைத் தமி­ழி­னம் மன்­னிக்­காது – என்­றார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் அமைப்­பு­க­ளின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் எஸ்.புவி­த­ரன், பத­விக்­கா­க­வும் பணத்­துக்­கா­க­வும் ஆசைப்­பட்டு சர்­வா­தி­காரி மகிந்­த­வி­டம் சர­ண­டைந்த வியா­ழேந்­தி­ரனை மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் மக்­கள் மன்­னிக்­கவே மாட்­டார்­கள். மாவட்­டத்தை விட்டு இது­வரை விரட்­டி­ய­டிப்­பார்­கள் – என்­றார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் சிவில் அமைப்­புக்­க­ளின் இணைப்­பா­ளர் வடி­வேல் சுரேஸ், நேற்­றுக் காலை­யில்­தான் கன­டா­வில இருந்து இலங்கை வந்த வியா­ழேந்­தி­ரன் தனது வீட்­டுக்­குக்­கூ­டப் போகா­மல் வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து நேரே மகிந்­த­வின் வீட்­டுக்­குப் போயுள்­ளார்.

அங்கு அவர் பல கோடி ரூபா பணத்­தைக்­கண்டு மகிந்­த­வின் கால்­க­ளில் விழுந்து பிரதி அமைச்­சுப் பத­வி­யைப் பேரம் பேசி எடுத்­துள்­ளார்.

இது அவ­ருக்­குப் படு­கே­வ­ல­மா­னது. எமது வாக்­கு­க­ளி­னால் நாடா­ளு­மன்­றம் சென்ற இவரை நாம் சும்மா விட­லா­காது – என்­றார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் சிவில் அமைப்­பு­க­ளின் உறுப்­பி­னர் சிவ­ராஜா கஜன், தலைமை அமைச்­சர் தொடர்­பில் த.தே.கூட்­ட­மைப்பு எடுக்க இருக்­கும் முடிவு ரணி­லுக்­கா­னதோ அல்­லது மகிந்­தா­வுக்­கா­னதோ அல்ல. அது தமி­ழி­னத்­தின் விடு­த­லைக்­கா­னது.

அந்த முடிவு இனத்­தின் பிர­தி­நிதி என்­னும் அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­ப­டுமே அன்றி எண்­ணிக்கை அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­ப­டாது. துரோ­கி­க­ளின் வெளி­யேற்­றம் அம்­மு­டிவை எவ்­வ­கை­யி­லும் பாதிக்­காது. வியா­ழேந்­தி­ரன் ஒரு பச்­சைத் துரோகி – என்­றார்.

Sharing is caring!